ஈராக், சிரியாவில் உள்ள ஆயுதக்குழுக்கள் மீது அமெரிக்கா அதிரடி தாக்குதல்!
3 மாசி 2024 சனி 08:41 | பார்வைகள் : 2801
ஈராக் மற்றும் சிரியாவில் உள்ள ஆயுதக்குழுக்கள் மற்றும் கிளர்ச்சிக் குழுக்களை குறிவைத்து 12-க்கும் மேற்பட்ட இடங்களில் அமெரிக்கா அதிரடி தாக்குதல் நடத்தி வருகின்றது.
ஈரான் ஆயுதக்குழுக்கள், கிளர்ச்சி குழுக்கள் ஈராக், சிரியா போன்ற நாடுகளில் உள்ள நிலையில் அந்த குழுக்களை இலக்குவைத்து அமெரிக்கப்படைகள் மீது அடிக்கடி தாக்குதல் நடத்தி வரும் நிலையில் அமெரிக்காவும் பதிலடி கொடுத்து வருகிறது.
இந்நிலையில் சில தினங்களுக்கு முன் ஜோர்டானில் உள்ள அமெரிக்க வீரர்கள் மீது டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டது.
இதில் 3 அமெரிக்கா வீரர்கள் கொல்லப்பட்டனர்.
இதற்கு சரியான பதிலடி கொடுக்கப்படும் என அமெரிக்கா எச்சரித்திருந்த நிலையில ஈராக் மற்றும் சிரியாவில் உள்ள ஆயுதக்குழுக்கள் மற்றும் கிளர்ச்சிக் குழுக்களை குறிவைத்து 12-க்கும் மேற்பட்ட இடங்களில் அமெரிக்கா அதிரடி தாக்குதல் நடத்தியுள்ளது.
மிக நீண்டதூரம் சென்று தாக்கும் குண்டுகளை பயன்படுத்தி இந்த தாக்குதலை அமெரிக்கா நடத்தியுள்ளது. தாக்குதலுக்குப் பிறகு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறுகையில் ,
"அமெரிக்க வீரர்களுக்கு தீங்கி விளைவித்தால், அதற்கு சரியான பதில் கொடுக்கப்படும்" எனத் தெரிவித்துள்ள அதேவேளை, அமெரிக்காவின் இந்த தாக்குதல் இறையாண்மை மீறல் என ஈராக் கண்டனம் தெரிவித்துள்ளது.