Paristamil Navigation Paristamil advert login

ஸ்மார்ட்போன் பயனர்களுக்கு எச்சரிக்கை: இந்த 12 செயலிகள் ஒன்று இருந்தாலும் உடனே நீக்கி விடுங்கள்

ஸ்மார்ட்போன் பயனர்களுக்கு எச்சரிக்கை: இந்த 12 செயலிகள் ஒன்று இருந்தாலும் உடனே நீக்கி விடுங்கள்

3 மாசி 2024 சனி 09:09 | பார்வைகள் : 1928


உங்கள் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் இந்த 12 செயலிகளை இருந்தால் உடனடியாக நீக்கி விடுங்கள் என்ற எச்சரிக்கை தகவலை பாதுகாப்பு வல்லுநர்களான ESET தெரிவித்துள்ளது.

இணையதள பாதுகாப்பு நிபுணர்களான ESET, மிகவும் ஆபத்தான 12 உளவு ஆண்ட்ராய்டு செயலிகளை கண்டுபிடித்துள்ளனர்.

தகவல் பரிமாற்ற செயலி(chat apps) போன்ற தோற்றங்களில் காணப்படும் இந்த உளவு செயலிகள் உங்கள் ஸ்மார்ட்போனில் Trojan எனப்படும் கட்டுப்படுத்தும் மென்பொருளை உட்செலுத்தி உங்களின் அழைப்பு விவரங்கள்,குறுஞ்செய்திகள், கேமரா கட்டுப்பாடு ஆகியவற்றின் தரவுகளை திருடுகிறது.

இவை மறைக்குறியாக்கப்பட்ட வாட்ஸ் அப் போன்ற செயலிகளின் end-to-end encrypted அரட்டைகளையும் கூட திருடக் கூடாது என எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த வரிசையில் பட்டியலிடப்பட்டுள்ள செயலிகள் விவரங்கள் முறையே YohooTalk, TikTalk, Privee Talk, MeetMe, Nidus, GlowChat, Let’s Chat, Quick Chat, Rafaqat, Chit Chat, Hello Chat, மற்றும் Wave Chat.   இந்த செயலிகள் உங்களது ஸ்மார்ட்போனில் இருந்தால் உடனடியாக அதை நீக்கிவிடுமாறும் பாதுகாப்பு நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இவற்றில் குறிப்பிடத்தக்க 6 செயலிகள் கூகுள் ப்ளே ஸ்டோரில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வஜ்ரா ஸ்பை(Vajra Spy) என்ற ரிமோட் அக்சஸ் ட்ரோஜன்(RAT) இந்த உளவு செயலிகளின் நடவடிக்கையில் மையத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.  

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்