Paristamil Navigation Paristamil advert login

இலங்கையில் கோர விபத்து - 12 வயது மாணவன் ஸ்தலத்திலேயே மரணம்

இலங்கையில் கோர விபத்து - 12 வயது மாணவன் ஸ்தலத்திலேயே மரணம்

3 மாசி 2024 சனி 09:36 | பார்வைகள் : 5053


சம்மாந்துறை – அம்பாரை பிரதான வீதியில் தென்கிழக்கு பல்கலைக் கழகத்தின் சம்மாந்துறை பிரயோக விஞ்ஞான  பீடத்தின் முன்னால் இடம்பெற்ற விபத்தில் 12 வயதுடைய சிறுவன் உடல் நசுங்கி இன்று பலியாகினார்.

குறித்த சிறுவன் பல்கலைக்கழக  பீடத்தின் பக்கத்திலிருந்து வீதியை கடந்து அடுத்த பக்கத்தில் உள்ள தமது வீட்டுக்குச் சென்று கொண்டிருந்த குறித்த மாணவனை சம்மாந்துறை பகுதியில் இருந்து  அம்பாறையை நோக்கி   வந்த  கென்டர் ரக வாகனம் மோதியலில்  மாணவன் ஸ்தலத்திலேயே மரணமடைந்துள்ளார்.

இதன் போது சம்மாந்துறை பிரதான வீதி  உடங்கா 02 இல்  வசிக்கும்  ஏ.எம்.பாஸீர் (வயது 12) எனும் மாணவன்  மரணமடைந்துள்ளதுடன் லொரி சாரதி  கைது செய்யப்பட்டுள்ளார்.

விபத்துக்குள்ளான வாகனம் சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதோடு மரணமடைந்த மாணவனின் உடல் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். R

வர்த்தக‌ விளம்பரங்கள்