Paristamil Navigation Paristamil advert login

மலேசிய முன்னாள் பிரதமரின் ஊழல் வழக்கு - தண்டனைக் காலத்தில் மாற்றம்

மலேசிய முன்னாள் பிரதமரின் ஊழல் வழக்கு - தண்டனைக் காலத்தில் மாற்றம்

3 மாசி 2024 சனி 09:39 | பார்வைகள் : 2516


மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜீப் ரஸாக் ஊழல் வழக்கில் சிக்கியுள்ளார்.


இந்நிலையில் மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜீப் ரஸாக்குக்கு ஊழல் வழக்கில் விதிக்கப்பட்டிருந்த 12 ஆண்டுகள் சிறைத் தண்டனையை அந்த நாட்டு பொதுமன்னிப்பு வாரியம் அரைவாசியாகக் குறைத்துள்ளது.

இது குறித்து வாரியம் நேற்று 02.02.2024 இல் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்களாக 

ஒரு எம்டிபி முறைகேடு வழக்கில் முன்னாள் பிரதமா் நஜீப் ரஸாக்குக்கு விதிக்கப்பட்டுள்ள சிறைத் தண்டனை 12 ஆண்டுகளில் இருந்து 6 ஆகக் குறைக்கப்படுகிறது.

அதையடுத்து, அவா் எதிர்வரும் 2028ஆம் ஆண்டு ஓகஸ்ட் 28ஆம் திகதியே விடுதலை செய்யப்படுவாா்.

இது தவிர, இந்த வழக்கில் ரஸாக்குக்கு விதிக்கப்பட்டிருந்த 21 கோடி ரிங்கிட் (சுமாா் ரூ.360 கோடி)அபராதமும் 5 கோடி ரிங்கிட்டாக (சுமாா் ரூ.87 கோடி) குறைக்கப்படுகிறது" 

கடந்த 2009 முதல் 2018ஆம் ஆண்டு மே மாதம் 10ஆம் திகதி வரை மலேசியாவின் பிரதமராக பொறுப்பு வகித்த நஜீப் ரஸாக், நாட்டில் தொழில் பெருக்கத்தை ஏற்படுத்துவதற்காகவும் அந்நிய முதலீடுகளை நேரடியாகக் கவா்வதற்காகவும் ‘1 மலேசியா மேம்பாட்டு நிறுவனம்’ (1எம்டிபி) என்ற அமைப்பைத் தொடங்கினாா்.

இந்த நிலையில், 1எம்டிபி நிறுவனத்துக்கு செலுத்தப்பட்ட 450 கோடி டொலரை (சுமாா் ரூ.37,000 கோடி) நஜீபுடன் தொடா்புடையவா்கள் சட்டவிரோதமாக தங்களது கணக்கில் பரிமாற்றம் செய்துகொண்டதாக குற்றம் சாட்டப்பட்டது.

இதுதொடா்பாக நடைபெற்று வந்த வழக்கில், நஜீப் ரஸாக் மீது சுமத்தப்பட்ட அதிகார துஷ்பிரயோகம், மக்களின் நம்பிக்கைக்கு குற்ற ரீதியில் துரோகமிழைத்தது, சட்டவிரோதமாக 94 இலட்சம் டொலரை (ரூ.78 கோடி) சட்டவிரோதமாகப் பெற்றுக் கொண்டது ஆகிய குற்றச்சாட்டுகளை கடந்த 2022இல் நீதிமன்றம் உறுதி செய்தது.


இந்நிலையில் அவருக்கு 12 ஆண்டுகள் சிறைத் தண்டனையை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்