Paristamil Navigation Paristamil advert login

காசாவில் இஸ்ரேலிய படையினர்களின் பேரிழப்பு...

காசாவில் இஸ்ரேலிய படையினர்களின் பேரிழப்பு...

3 மாசி 2024 சனி 10:11 | பார்வைகள் : 2350


காசா மீது இஸ்ரேல் நாடானது தீவிர தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றது.

காசாவில் கடந்த வெள்ளிக்கிழமை தாம் நடத்திய தாக்குதல்களில் 25 இஸ்ரேலிய படையினர் கொல்லப்பட்டனர் அல்லது காயமடைந்தனர் என போராளி குழுக்கள் அறிவித்துள்ளன.

இதன்படி காசா நகரின் மேற்கே ஜவாசாத் பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் 15 இஸ்ரேலிய வீரர்களைக் கொன்றதாக அல்-கஸ்ஸாம் படையணி அறிவித்துள்ளது.

இதேவேளை அல்-குட்ஸ் படைப்பிரிவுகள், பத்து வீரர்களைக் கொண்ட இஸ்ரேலியப் படையை குறிவைத்து, கான் யூனிஸ் நகரில் உள்ள ஒரு குடியிருப்பு இல்லத்தில் நடத்திய தாக்குதலில், பத்து இஸ்ரேலிய வீரர்கள் கொல்லப்படவோ அல்லது காயமடைந்து இருக்கலாம் என அறிவித்துள்ளன.

இஸ்ரேல் விமானக்குண்டுவீச்சுக்களால் காசாவின் குடியிருப்புகளையும் மக்களையும் கொன்றொழித்து வரும் நிலையில் இஸ்ரேல் படைக்கு இந்த பேரிழப்பு ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்