விஜய் பிப்ரவரி 2-ஆம் தேதியை தேர்வு செய்ததன் பின்னணி என்ன?
3 மாசி 2024 சனி 15:09 | பார்வைகள் : 2826
விஜய், தன்னுடைய அரசியல் பிரவேசத்தை அதிரடியாக அறிவித்ததை தொடர்ந்து நேற்று முதல் விஜய் ரசிகர்கள் இந்த மகிழ்ச்சியை பட்டாசு வெடித்து கொண்டாடி வருகிறார்கள். தன்னுடைய அரசியல் பயணம் குறித்து விஜய் அறிவித்து வெளியிட்ட அறிக்கையில்... ஜோசப் விஜய் நீக்கப்பட்டதில் இருந்து அவரின் புகைப்படம், மற்றும் அறிவித்த தேதி, கட்சியின் பெயர் பின்னணியில் உள்ள பல தகவல்கள் வெளியாகியுள்ளது.
நடிப்பில் உச்சத்தில் இருக்கும் போதே... அரசியலில் கால் பதித்துள்ள நடிகர் விஜய், நேற்று தன்னுடைய கட்சியின் பெயரை அறிவித்து, அதிகாரபூர்வ அறிவிப்பு ஒன்றையும் வெளியிட்டார். இந்த அறிக்கை தான் தற்போது பல்வேறு சர்ச்சைகளுக்கும் வழிவகுத்துள்ளது. இதற்கு முன் தளபதி விஜய் வெளியிட்ட அறிக்கைகளில் எல்லாம் ஜோசப் விஜய் என்றோ சிஜே விஜய் என்றோ பெயர் இடம் பெற்றிருந்தது.
ஆனால் இந்த முக்கிய அறிக்கையில் ஜோசப் என்கிற பெயரை நீக்கி, வெளியிட்டுள்ளார். இதன் மூலம் மத அடையாளத்தை நீக்கி, அனைவருக்கும் பொதுவான நபராக இதன் மூலம் தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளார்.
அதேபோல் இந்த அறிக்கையில் இடம் பெற்றிருந்த விஜயின் புகைப்படத்தில், அவர் நெற்றியில் குங்கும பொட்டோடு இருக்கும் புகைப்படம் இடம் பெற்றிருந்தது. இது குறித்து விஜயின் நெருங்கிய வட்டாரத்தில் விசாரித்த போது, பல முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளது.
தளபதி விஜய், தன்னுடைய கட்சியை அறிவிப்பதற்கு, தேர்வு செய்துள்ள பிப்ரவரி 2 ஆம் தேதி கிறிஸ்தவ மக்களுக்கு மிகவும் முக்கிய நாள் என்பதை தாண்டி, மிகவும் புனிதமான நாள் என்று கூறப்படுகிறது. இயேசு கிறிஸ்து பிறந்து பின்பு 40 நாள் விரதம் இருந்த மாதா, குழந்தையை பாதுகாத்து பிப்ரவரி இரண்டாம் தேதி தான் தேவனுக்கு அர்ப்பணித்து, புனிதராக மாறியதாக கூறப்படுகிறது.
அப்படி புனித மிகுந்த இந்த நாளில் தான் விஜய் தன்னுடைய அரசியல் பிரவேசம் குறித்து அறிவிக்கும் நாளாக தேர்வு செய்துள்ளார். இந்த நாளில் தான் தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பம் வழங்கப்பட்டு விட வேண்டும் என்கிற, அசைன்மென்ட்டை புஸ்ஸி ஆனந்த் மற்றும் லாயர் வெங்கட்ராமனிடம் வழங்கியதாக கூறப்படுகிறது. அதே போல், அன்றைய தினம் 12:40 மணிக்கு மேல், அஷ்டமி துவங்குவதற்கு முன்பே விஜய் கொடுத்த அசைன்மெண்டை மிகவும் கச்சிதமாக செய்து முடித்துள்ளார் புஸ்ஸி ஆனந்த்.
மேலும் விஜய் தமிழில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானது வெற்றி என்கிற திரைப்படத்தில் தான்... எனவே தன்னுடைய கட்சியின் பெயரில் வெற்றி என்கிற பெயரை இடம்பெற செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கட்சி அறிவிப்பு திட்டத்தை 2025 ஆம் ஆண்டு செயல்படுத்தலாம் என நடிகர் விஜய் நினைத்தபோதிலும், ல்கால சூழல் காரணமாக இப்போதே அறிவித்திருப்பதாக கூறப்படுகிறது. மேலும் வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு பின்னர், கட்சிகளை பதிவு செய்வதில் சில மாற்றங்கள் ஏற்படலாம் என கூறப்படுவதும் விஜய் இப்போதே கட்சியை அறிவிக்க முக்கிய காரணம் என கூறப்படுகிறது