உக்ரேனில் இரு பிரெஞ்சு தன்னார்வ தொடர்கள் பலி! - பயங்கரவாத தடுப்பு பிரிவினர் விசாரணை!
3 மாசி 2024 சனி 15:23 | பார்வைகள் : 16693
உக்ரேனில் கடமையாற்றிக்கொண்டிருந்த இரு பிரெஞ்சு மனிதாபிமான உதவியாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். பெப்ரவரி 1 ஆம் திகதி வியாழக்கிழமை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
உக்ரேனின் தெற்கு பகுதி ஒன்றில் வியாழக்கிழமை காலை இரஷ்ய துருப்புக்கள் மேற்கொண்ட தாக்குதலில் அவர்கள் கொல்லப்பட்டதாக பிரெஞ்சு வெளியுறவுத்துறை அமைச்சகம் நேற்று தெரிவித்தது. உக்ரேனின் தெற்கு பகுதியில் உள்ள Beryslav எனும் சிறு நகப்பகுதி மீது இரஷ்யா இடைவிடாத தாக்குதல் நடத்தியுள்ளது.
மேற்படி தாக்குதலில் கொல்லப்பட்ட இரு தன்னார்வ தொண்டர்களுக்கு ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் இரங்கல் தெரிவித்ததுடன், இரஷ்யாவின் இந்த தாக்குதலை கோழைத்தனமான நடவடிக்கை எனவும் விமர்சித்துள்ளார்.
இந்நிலையில், பிரெஞ்சு பயங்கரவாத தடுப்பு அலுவலகமான Le parquet antiterroriste (Pnat) மேற்படி சம்பவம் தொடர்பில் சர்வதேச விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

















Annuaire
Scan