Paristamil Navigation Paristamil advert login

விஜய்யின் அரசியல் வருகை அ.தி.மு.க.வின் வாக்குகளை பாதிக்காது - முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ

விஜய்யின் அரசியல் வருகை அ.தி.மு.க.வின் வாக்குகளை பாதிக்காது - முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ

4 மாசி 2024 ஞாயிறு 03:48 | பார்வைகள் : 4247


நடிகர் விஜய் "தமிழக வெற்றி கழகம்" என்ற புதிய கட்சியை தொடங்கியுள்ளார். தனது கட்சியின் பெயரை டெல்லி தேர்தல் ஆணையத்தில் அவர் பதிவு செய்துள்ளார். இந்நிலையில் விஜய் கட்சியின் பெயர் அறிவிப்பை தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களும் தங்கள் கருத்தை தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் நடிகர் விஜய் கட்சி ஆரம்பித்தது குறித்து மதுரையில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களிடம் கூறியதாவது;-

"நடிகர் விஜய்யின் அரசியல் வருகை அ.தி.மு.க.வின் வாக்குகளை பாதிக்காது. ஏற்கனவே சினிமாவில் இருந்து நிறைய பேர் அரசியலுக்கு வந்துள்ளனர். நடிகர் விஜய்யின் அரசியல் வாழ்க்கை மக்கள் கையில்தான் இருக்கிறது. ஆனால் அவர் கமல்ஹாசனைப் போல் ஆகிவிடக்கூடாது. நாட்டை சீர்திருத்தப் போவதாகக் கூறி அரசியலுக்கு வந்த கமல்ஹாசன், இப்போது எம்.பி. சீட்டுக்காக மற்றொரு கட்சியுடன் சேர்ந்துகொண்டிருக்கிறார்."

இவ்வாறு செல்லூர் ராஜூ கூறினார். 
 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்