யாழ்.பல்கலை மாணவர்களினால் ஏ9 வீதி முடக்கம் - நீர்த்தாரை, கண்ணீர்ப்புகை பிரயோகம்
4 மாசி 2024 ஞாயிறு 07:01 | பார்வைகள் : 2247
யாழ்.பல்கலைக்கழக மாணவர்களினால் கிளிநொச்சியில் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டத்தில் ஈடுப்பட்ட ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளமையால் கொழும்பு - யாழ்ப்பாணம் ஏ9 வீதி முடக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் 76ஆவது சுதந்திரதினத்தை தமிழர்களின் கரிநாளாக பிரகடனப்படுத்தி கிளிநொச்சியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த, கரிநாள் பேரணியில் பொதுமக்கள் மீது பொலிஸார் நீர்த்தாரை பிரயோகம் மோற்கொண்டுள்ளதால் பதற்றமான சூழ்நிலை நிலவி வருவகின்றது.
இலங்கையின் சுதந்திர தினத்தை கரிநாளாக பிரகடனப்படுத்தி பொது முடக்கத்துக்கும் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் அழைப்பு விடுத்திருந்தனர்.
இந்த நிலையில், இன்று கொழும்பில் இடம்பெற்ற சுதந்திரதின நிகழ்வுகளுக்கு எதிராக வட மாகாண கிளிநொச்சி மாவட்டத்தில் இடம்பெற்று வரும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகத்தை மேற்கொண்டு அடக்க முற்பட்டனர்.
தமிழரசு கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சிறீதரன் மற்றும் தமிழ்த்தேசிய அரசியல் ஆதரவாளர்களும் போராட்டத்தில் பங்குபற்றினர்.