Paristamil Navigation Paristamil advert login

ஹெளத்தி கிளர்ச்சியாளர்கள் மீது   தாக்குதல் - அவுஸ்திரேலியாவின் அதிரடி முடிவு

ஹெளத்தி கிளர்ச்சியாளர்கள் மீது   தாக்குதல் - அவுஸ்திரேலியாவின் அதிரடி முடிவு

4 மாசி 2024 ஞாயிறு 07:49 | பார்வைகள் : 2177


யேமனின் ஹெளத்திகிளர்ச்சியாளர்களிற்கு எதிராக அமெரிக்காவும் பிரிட்டனும் இணைந்து  தாக்குதல்களை முன்னெடுத்துவருகின்றது.

இந்நிலையில் அவுஸ்திரேலியா தனது ஆதரவை தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நேற்றும் அமெரிக்காவும் பிரிட்டனும் இணைந்து தாக்குதலை மேற்கொண்டுள்ள நிலையிலேயே அவுஸ்திரேலியா இந்த தாக்குதலிற்கு தனது ஆதரவை வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பான கூட்டறிக்கையொன்றை அவுஸ்திரேலிய பாதுகாப்பு அமைச்சர் ரிச்சட் மார்லெஸ் வெளியிட்டுள்ளார்.

செங்கடல் வழியாக பயணம் மேற்கொள்ளும் அப்பாவி மாலுமிகளின் உயிர்களிற்கும் சர்வதேசவர்த்தகத்திற்கும் ஆபத்தை ஏற்படுத்தும் ஹெளத்தி கிளர்ச்சியாளர்களின் தாக்குதல் திறனை குறைப்பதை நோக்கமாக கொண்ட நோக்கிலேயே இந்த துல்லியமான தாக்குதல்கள் இடம்பெறுகின்றன என ரிச்சட் மார்லஸ் தெரிவித்துள்ளார்.

செங்கடல் பகுதியில் பதற்றத்தை குறைப்பதும் அந்தபகுதியில் ஸ்திரதன்மையை ஏற்படுத்துவதுமே இந்த தாக்குதலின் நோக்கம் என தெரிவித்துள்ள அவர் நாங்கள் ஹெளத்திகிளர்ச்சி குழுக்களின் தலைமைக்கு எங்களின் எச்சரிக்கையை மீண்டும் தெரிவிப்போம் என குறிப்பிட்டுள்ளார்.

உலகின் மிகமுக்கியமான கடல்பாதையில் சுதந்திரமான வர்த்தகம் மற்றும் உயிர்களை நாங்கள் பாதுகாப்போம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்