Paristamil Navigation Paristamil advert login

ஈராக், சிரியாவின் 85 தளங்களின் மீது அமெரிக்கா பதிலடி தாக்குதல்

ஈராக், சிரியாவின் 85 தளங்களின் மீது அமெரிக்கா பதிலடி தாக்குதல்

4 மாசி 2024 ஞாயிறு 08:22 | பார்வைகள் : 1611


ஜோர்டானில் உள்ள தங்கள் முகாம் மீது சமீபத்தில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமெரிக்கா தாக்குதல்களை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

ஈராக் மற்றும் சிரியாவில் உள்ள ஈரானிய புரட்சிகர காவல்படை (IRGC) ஆதரவுடன் 85க்கும் மேற்பட்ட போராளித் தளங்களை அமெரிக்க போர் விமானங்கள் குறிவைத்தன. 

இதன் விளைவாக சிரியாவில் 18 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.

வெள்ளிக்கிழமை உள்ளூர் நேரப்படி மாலை 4 மணித்தியாலம் இந்தத் தாக்குதல்கள் நடந்ததாக தகவல்  வெளியாகியுள்ளது.

முக்கிய கட்டளைக் கட்டுப்பாட்டு மையம் மற்றும் உளவுத்துறை மையங்கள், ரொக்கெட்டுகள், ஏவுகணைகள், ஆளில்லா விமானங்கள், வெடிமருந்து சேமிப்பு கிடங்குகள் மற்றும் தீவிரவாதிகளுக்கு சொந்தமான தளவாட வசதிகள் ஆகியவற்றில் சோதனை நடத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை ஜோர்டானில் ஈரான் ஆதரவு பயங்கரவாத குழுக்கள் நடத்திய ஆளில்லா விமான தாக்குதலில் மூன்று அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் சுமார் 40 பேர் காயமடைந்தனர்.

இந்தத் தாக்குதல்களுக்குப் பிறகு, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

அதில் அமெரிக்கர்களுக்கு யாராவது தீங்கு விளைவித்தால், அவர்கள் தக்க பதிலடி பெறுவார்கள் என்று தெரிவித்துள்ளார்.


 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்