பூனம் பாண்டேவுக்கு சிறை தண்டனை கிடைக்குமா?
4 மாசி 2024 ஞாயிறு 09:00 | பார்வைகள் : 2188
நடிகை பூனம் பாண்டே நேற்று முன்தினம் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் காரணமாக காலமானார் என்று அவருடைய மேலாளர் அறிவித்த நிலையில் நேற்று திடீரென பூனம் பாண்டே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் உயிருடன் இருப்பதாகவும், கர்ப்பப்பை வாய் புற்று நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இந்த செய்தியை வெளியிட்டதாகவும், இந்த செய்தி யார் மனதையாவது பாதித்திருந்தால் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்றும் தெரிவித்திருந்தார்.
அவருடைய இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருவதை அடுத்து பெரும் சர்ச்சையும் ஆகியுள்ளது. ஒரு நோய்க்குரிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இவ்வாறு பொய் சொல்வது மட்டமான செயல் என்றும் விளம்பரத்திற்காக செய்யும் பைத்தியக்காரத்தனம் என்றும் நான் நெட்டிசன்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.
மேலும் கடந்த 2000ஆம் ஆண்டு இயற்றப்பட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவின் சட்டப்படி சமூக வலைதளங்களில் தவறான தகவல் பரப்பினால் மூன்று ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என்றும், அதே தவறை திரும்ப செய்தால் ஐந்து ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி 5 லட்சம் முதல் 10 லட்சம் வரை அபராதம் விதிக்கப்பட வாய்ப்புள்ளது.
இந்த நிலையில் சமூக வலைதளத்தில் தவறான தகவல் பரப்பிய பூனம் பாண்டே மீது சமூக ஆர்வலர்கள் வழக்கு தொடர்ந்தால் அவருக்கு அதிகபட்சமாக ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை கிடைக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.