Paristamil Navigation Paristamil advert login

முட்டை 65

 முட்டை 65

4 மாசி 2024 ஞாயிறு 09:16 | பார்வைகள் : 2103


பொதுவாக வீட்டில் முட்டை இருந்தால் அதை அவித்து, ஆம்லெட் போட்டு அல்லது குழம்புகளில் சேர்த்து சாப்பிடுவோம். ஆனால் எப்போதாவது முட்டை 65 செய்து சாப்பிட்டு இருக்கிறீர்களா.?

அப்படி இல்லையென்றால் வீட்டிலேயே முட்டை வைத்து எப்படி ரெஸ்டாரண்ட் ஸ்டைலில் ‘முட்டை 65’ செய்யலாம் என்று இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள் :

வேகவைத்த முட்டை - 5

பச்சை முட்டை - 1

நறுக்கிய இஞ்சி - 1 டீஸ்பூன்

நறுக்கிய பூண்டு - 1 டீஸ்பூன்

பச்சை மிளகாய் - 2 அல்லது 3

கடலைமாவு - 5 அல்லது 6 டேபிள்ஸ்பூன்

மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை

சிவப்பு மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்

காஷ்மீரி மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்

சீரகப் பொடி - 1/2 டீஸ்பூன்

கரம் மசாலா தூள் - 1/4 -1/2 டீஸ்பூன்

உப்பு - சுவைக்கேற்ப

கோட்டிங் செய்ய தேவையானவை :

எண்ணெய் - 1.5 டீஸ்பூன்

நறுக்கிய பூண்டு - 2 டீஸ்பூன்

கீறிய பச்சை மிளகாய் - 3 அல்லது 4

கறிவேப்பிலை - 3 கொத்து

சிவப்பு மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்

தக்காளி கெட்ச்அப் - 3 டீஸ்பூன் (1 டீஸ்பூன் தண்ணீரில் கலந்துகொள்ளவும்)

செய்முறை :

முதலில் முட்டைகளை தண்ணீரில் வேகவைத்து அதன் ஓடை உரித்து முட்டையின் வெள்ளை கருவை தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.

தனியாக எடுத்து வைத்துள்ள வெள்ளை கருவை தோராயமாக சிறுய துண்டுகளாக நறுக்கிக்கொள்ளுங்கள்.

பிறகு நறுக்கிய முட்டையின் வெள்ளை கருவுடன் பொடியாக நறுக்கி வைத்துள்ள இஞ்சி, பூண்டு மற்றும் பச்சை மிளகாயை சேர்த்து கொள்ளவும்.

அடுத்து அதனுடன் தேவையான அளவு கடலைமாவு, மஞ்சள் தூள் மிளகாய் தூள், காஷ்மீரி மிளகாய் தூள், சீராக பொடி, கரம் மசாலா, சுவைக்கேற்ப உப்பு மற்றும் ஒரு பச்சை முட்டையை உடைத்து அதனுடன் சேர்த்து நன்றாக நன்றாக கலந்துகொள்ளவும்.

பின்னர் அடுப்பில் கடாய் ஒன்றை வைத்து முட்டை கலவையை ஆழமாக வறுத்துக்கொள்ள தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.

எண்ணெய் நன்கு சூடானதும் மசாலாவுடன் கலந்து வைத்துள்ள முட்டை வெள்ளை கருவை கைகளால் சிறிய உருண்டைகளாக சூடான எண்ணெய்யில் போட்டுக்கொள்ளவும்.

இவற்றை மிதமான தீயில் சுமார் 3 - 4 நிமிடங்கள் நன்றாக பொன்னிறமாக வறுத்து எடுத்துக்கொள்ளவும்.

பின்னர் அதனுடன் சிவப்பு மிளகாய் தூள் மற்றும் தண்ணியில் கலந்து வைத்துள்ள தக்காளி கெட்ச்அப் சேர்த்து மிதமான தீயில் சுமார் 1-2 நிமிடங்களுக்கு நன்றாக கலந்து வறுத்து எடுத்தால் சூடான முட்டை 65 தயார்…

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்