இலங்கையில் அரிசி தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!
30 ஆடி 2023 ஞாயிறு 10:02 | பார்வைகள் : 9124
பல பிரதேசங்களில் நிலவும் வரட்சியான காலநிலை தொடருமானால் எதிர்வரும் பெரும்போகம் தோல்வியடைந்தால் நாட்டில் அரிசி தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
அப்படி நடந்தால், தற்போதைய நிலவரப்படி இந்தியாவில் இருந்து கூட அரிசியை பெற்றுக் கொள்ள முடியாத நிலை ஏற்படும் என அமைச்சர் தெரிவித்தார்.
தற்போதைய நிலைமையைக் கருத்தில் கொண்டு கால்நடைத் தீவனம் மற்றும் எத்தனோல் உற்பத்திக்கான அரிசி விநியோகத்தை நிறுத்த வேண்டிய நிலை ஏற்படும் என அமைச்சர் மஹிந்த அமரவீர சுட்டிக்காட்டியுள்ளார்.


























Bons Plans
Annuaire
Scan