Paristamil Navigation Paristamil advert login

யாழ். ஆவா குழுவின் தலைவர் கொழும்பில் கைது!

யாழ். ஆவா குழுவின் தலைவர் கொழும்பில் கைது!

4 மாசி 2024 ஞாயிறு 13:47 | பார்வைகள் : 4745


‘ஆவா’ குழு எனப்படும் பிரபல குற்றக் கும்பலின் தலைவனாக சந்தேகிக்கப்படும் நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். 

யாழ்ப்பாணத்தில் கப்பம் பெறுதல் உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்தவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கல்கிஸை பிரதேசத்தில் உள்ள வீடு ஒன்றில் வைத்து வலான குற்றத் தடுப்பு பிரிவு அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

கைது செய்யப்படும் போது சந்தேகநபர் வெளிநாட்டுக்கு தப்பிச் செல்ல தயாராக இருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

வர்த்தக‌ விளம்பரங்கள்