இலங்கையில் குவியும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள்!

4 மாசி 2024 ஞாயிறு 16:03 | பார்வைகள் : 6005
இலங்கைக்கு தற்போது வருகைத்தரும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரிப்பை பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, இந்த வருடத்தில் கடந்த ஜனவரி மாதத்தில் மாத்திரம் நாட்டுக்கு வருகைத்தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை இரண்டு இலட்சத்தை கடந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.
இதன்படி, 208,253 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகைத் தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், இந்தியாவிலிருந்தே அதிகமான சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகைத் தந்துள்ளதாக அந்த சபை குறிப்பிட்டுள்ளது.
இதன்படி, இந்தியாவிலிருந்து 34,399 பேரும், ரஸ்யாவிலிருந்து 16,665 பேரும், ஜேர்மனியிலிருந்து 13,593 பேரும், சீனாவிலிருந்து 11,511 பேரும் குறித்த காலப்பகுதியில் நாட்டுக்கு வருகைத் தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.