Paristamil Navigation Paristamil advert login

ஒட்டிப் பிறந்த இரட்டை சகோதரிகள்: 33 வயதில் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்..?

ஒட்டிப் பிறந்த இரட்டை சகோதரிகள்: 33 வயதில் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்..?

5 மாசி 2024 திங்கள் 07:49 | பார்வைகள் : 1675


அமெரிக்காவை சேர்ந்த ஒட்டிப்பிறந்த இரட்டையர்கள் 10 வருடங்களாக ஆசிரியராக பணியாற்றி அசத்தி வருகின்றனர்.

ஏபி மற்றும் பிரிட்டானி(Abby & Brittany) என்ற அமெரிக்காவை சேர்ந்த ஒட்டிப்பிறந்த இரட்டையர்கள் தங்களது தனித்துவமான வாழ்க்கையின் மூலம் அனைவரையும் ஈர்த்துள்ளனர்.  

இரட்டையர்களான ஏபி மற்றும் பிரிட்டானிக்கு நுரையீரல், முதுகு தண்டுவடம், இதயம், வயிறு என அனைத்துமே தனித்தனியாக தான் உள்ளது. ஆனால் இருவருக்கும் சேர்த்து கை மற்றும் கால்கள் இரண்டு தான் உள்ளது.  

ஏபி மற்றும் பிரிட்டானி இருவரும் தனித்தனியாகவே எழுதுகிறார்கள், படிக்கிறார்கள், உணவருந்துகிறார்கள், அதே போலவே இருவரும் தனித்தனியாக கார் ஓட்டி அவர்களுக்கென தனியான ஓட்டுநர் உரிமம் வைத்துள்ளனர்.

இருவரும் 2012ம் ஆண்டு  கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு பள்ளியில் குழந்தைகளுக்கு கணிதம் சொல்லி கொடுக்கும் பணியை செய்து வருகின்றனர். 

பாடம் எடுப்பது, வகுப்பை கவனிப்பது என தனித்தனியாக செய்தாலும் இருவருக்கும் சேர்த்து ஒரே சம்பளம் தான் வழங்கப்படுகிறது.

இது தொடர்பாக இரட்டையர்களான ஏபி மற்றும் பிரிட்டானி வழங்கிய கருத்தில், நாங்கள் இணைந்து வகுப்புகளை எடுத்தாலும், தனித்தனியாக தனியாக தான் கல்வியை பயின்றோம், இருவருக்கும் வேறுபட்ட கருத்துக்கள் உள்ளன, தனிப்பட்ட வேறு வேறு கருத்துக்களை மாணவர்களுக்கு சொல்லிக் கொடுக்கிறோம் இருந்தும் ஒரே சம்பளம் என்பது எங்களுக்கு உரியது அல்ல என்று கூறுகின்றனர்.  

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்