கொழும்பு இளைஞன் சுட்டுக்கொலை - மர்ம நபர்களை தேடும் பொலிஸார்
30 ஆடி 2023 ஞாயிறு 11:37 | பார்வைகள் : 9115
கொழும்பு வாழைத்தோட்டம் – மார்ட்டிஸ் ஒழுங்கை பகுதியில் இன்று பிற்பகல் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொழும்பு 12 பகுதியைச் சேர்ந்த 20 வயதுடைய இளைஞன் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் தப்பிச் சென்றுள்ளதுடன், அவர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.


























Bons Plans
Annuaire
Scan