Paristamil Navigation Paristamil advert login

ஒரே ஒரு  சிக்ஸர்... 1,24,500 பரிசு தொகையை பெற்ற இலங்கை வீரர் 

ஒரே ஒரு  சிக்ஸர்... 1,24,500 பரிசு தொகையை பெற்ற இலங்கை வீரர் 

5 மாசி 2024 திங்கள் 08:18 | பார்வைகள் : 1663


டெஸெர்ட் வைப்பர்ஸ் அணிக்கு எதிரான டி20 போட்டியில் இலங்கையின் குசால் பெரேரா 65 ஓட்டங்கள் விளாசினார். 

அபுதாபியில் நடந்த இன்டர்நேஷனல் லீக் டி20 போட்டியில் MI எமிரேட்ஸ் மற்றும் டெஸெர்ட் வைப்பர்ஸ் அணிகள் மோதின.

முதலில் ஆடிய MI அணி 5 விக்கெட் இழப்பிற்கு 188 ஓட்டங்கள் குவித்தது. தொடக்க வீரராக களமிறங்கிய இலங்கையின் குசால் பெரேரா 46 பந்துகளில் ஒரு சிக்ஸர், 8 பவுண்டரிகளுடன் 65 ஓட்டங்கள் விளாசினார். 

அம்பத்தி ராயுடு 44 (38) ஓட்டங்களும், கேப்டன் பூரன் 15 பந்துகளில் (4 சிக்ஸர், 3 பவுண்டரிகள்) 39 ஓட்டங்களும் எடுத்தனர்.

பின்னர் களமிறங்கிய டெஸெர்ட் வைப்பர்ஸ் அணி, 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 158 ஓட்டங்கள் மட்டுமே எடுத்ததால், 30 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

அதிகபட்சமாக அலி நசீர் 47 பந்துகளில் 2 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 63 ஓட்டங்களும், லுக் வுட் 30 (21) ஓட்டங்களும் விளாசினர்.

MI எமிரேட்ஸ் அணியின் தரப்பில் பாசல்ஹக் பரூக்கி 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். ஆட்ட நாயகன் விருதை 4 கேட்சுகள் பிடித்த பூரன் வென்றார்.

அதே சமயம் குசால் பெரேரா பாரிய சிக்ஸர் அடித்ததற்காக 1,500 டொலர்கள் (இந்திய மதிப்பில் 1,24,500 ரூபாய்) பரிசு பெற்றார்.     

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்