நமீபியா நாட்டின் ஜனாதிபதி Hage Geingob மரணம்

5 மாசி 2024 திங்கள் 09:04 | பார்வைகள் : 6352
நமீபிய ஜனாதிபதி ஹேஜ் ஜிங்கோப் (Hage Geingob) 04-02-2024 காலமானார்.
82 வயதாகும் நிலையில், கடந்த சில நாட்களாக புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த ஹேஜ், விண்ட்ஹோக்கில் உள்ள லேடி பொஹம்பா மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை காலமானார்.
நமீபிய ஜனாதிபதி அலுவலகம் இதனைத் தெரிவித்துள்ளது. ஜனாதிபதி Hage Geingob இறந்துவிட்டதாக சமூக ஊடகங்களிலும் பதிவிடப்பட்டது.
2014-ஆம் ஆண்டில், நோய்வாய்ப்பட்ட ஜிங்கோப், வழக்கமான மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்டார் மற்றும் புரோஸ்டேட் புற்றுநோயால் கண்டறியப்பட்டார். அன்று முதல் அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில், அண்மையில் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்லவுள்ளதாகவும் ஹேய்ஸ் தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது. ஆனால் அதற்குள் அவர் இறந்துவிட்டார்.
2014ல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஜிங்கோப், அடுத்த ஆண்டே அதிபரானார்.