18 நாட்கள் தடைப்பட உள்ள 14 ஆம் இலக்க மெற்றோ!!

5 மாசி 2024 திங்கள் 10:28 | பார்வைகள் : 9887
விஸ்தரிப்பு பணிகளுக்காக 14 ஆம் இலக்க தானியங்கி மெற்றோ சேவைகள் 18 நாட்கள் தடைப்பட உள்ளன.
இவ்வருடம் ஏப்ரல் மாதம் முதல் மே மாதம் வரையான நாட்களில் 18 நாட்கள் சேவைத்தடை ஏற்பட உள்ளது. ஓர்லி சர்வதேச விமான நிலையம் வரையும், Saint-Denis Pleyel வரையும் சேவைகள் விஸ்தரிக்கப்பட உள்ளன. ஒலிம்பிக் போட்டிகளை கருத்தில் கொண்டு மிக விரைவாக விஸ்தரிப்பு பணிகளை நிறைவு செய்யப்படவேண்டிய கட்டாயத்தில் RATP உள்ளது. அதையடுத்தே இந்த சேவைத்தடை ஏற்பட உள்ளது.
விபரங்கள்!
ஏப்ரல் 1 ஆம் திகதி (ஈஸ்ட்டர் திங்கள்)
ஏப்ரல் 7 ஆம் திகதி தொடக்கம் 14 ஆம் திகதி வரையான 8 நாட்கள்.
ஏப்ரல் 27 மற்றும் 28 ஆம் திகதிகள்.
மே 8 ஆம் திகதி முதல் 12 ஆம் திகதி வரையான ஐந்து நாட்கள்.
மே 25 மற்றும் 26 ஆகிய இரு நாட்கள்
என மொத்தம் 18 நாட்கள் சேவைத்தடை ஏற்பட உள்ளது.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1