Paristamil Navigation Paristamil advert login

பனிச்சறுக்கு விளையாட்டில் ஈடுபட்ட இருவர் பலி!!

பனிச்சறுக்கு விளையாட்டில் ஈடுபட்ட இருவர் பலி!!

5 மாசி 2024 திங்கள் 13:29 | பார்வைகள் : 7432


பனிச்சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டிருந்த இரு பிரெஞ்சு வீரர்கள் பலியாகியுள்ளனர். நேற்று ஞாயிற்றுக்கிழமை இச்சம்பவம் Haute-Savoie மாவட்டத்தில் இடம்பெற்றுள்ளது.

நாற்பது வயதுகளையுடைய இரு பிரெஞ்சு வீரர்களும் Servoz எனும் சிறு பகுதியில் அமைந்துள்ள உயரமான மலையில் இருந்து விழுந்து உயிரிழந்துள்ளனர். மருத்துவர்களுடன் மீட்புக்குழுவினர் உலங்குவானூர்தியில் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். இருந்தபோதும் அவர்கள் இருவரையும் காப்பாற்ற முடியாமல் போயுள்ளது.

இரு சடலங்களும் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது. மேற்படி சம்பவம் தொடர்பில் அரச வழக்கறிஞர் அலுவலகம் விசாரணைகள் முன்னெடுத்துள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்