ஒரே ஓவரில் உலக சாதனை படைத்த வீரர்
31 ஆடி 2023 திங்கள் 05:36 | பார்வைகள் : 8909
ஆப்கானிஸ்தானில் காபூல் ப்ரீமியர் லீக் போட்டிகள் நடைபெற்று வருகின்றது.
மொத்தம் ஐந்து அணிகள் பங்கேற்கும் இத்தொடரின் கடைசி ஆட்டம் நேற்று இடம்பெற்றது.
இதில் ஷாஹின் ஹண்டர்ஸ் மற்றும் அபாசின் டிஃபண்டர்ஸ் ஆகிய அணிகள் மோதின.
இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அபாசின் அணி, பந்துவீச்சை தேர்வு செய்தது, இதனையடுத்து களமிறங்கிய ஷாஹின் அணி 18 ஓவரில் 6 விக்கெட்டுகளை இழந்து 158 ஓட்டங்கள் எடுத்திருந்தது.
19வது ஓவரை அபாசின் அணியின் அமிர் சாஜாய் வீச, ஷாஹின் அணியின் தலைவர் செதிகுல்லா அடல் எதிர்கொண்டார்.
முதல் பந்தை நோ பால் ஆக சிக்ஸருக்கு பறக்கவிட்டார், அடுத்தடுத்த 6 பந்துகளையும் சிக்ஸருக்கு பறக்கவிட்டார்.
அந்த ஒரு ஓவரில் மட்டும் 7, 5, 6,6,6,6,6,6 என 48 ஓட்டங்கள் கிடைத்தது, இதன் மூலம் சாதனை படைத்தார் செதிகுல்லா.
அதிக ஓட்டங்களை விட்டுக்கொடுத்த வீரர் என்ற மோசமான சாதனையை படைத்தார் அமிர் சாஜாய்.


























Bons Plans
Annuaire
Scan