பரிசின் வீதிகளில் படுத்துறங்கும் 3,492 வீடற்றவர்கள்!!
5 மாசி 2024 திங்கள் 19:00 | பார்வைகள் : 3121
ஒவ்வொரு ஆண்டினைப் போலவும் இந்த 2024 ஆம் ஆண்டிலும் Nuit de la solidarité ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. வீதிகளில் படுத்துறங்கும் வீடற்றவர்களை (SDF) கணக்கெடுக்கும் இந்த நிகழ்வானது ஏழாவது ஆண்டாக இவ்வருடம் இடம்பெற்றிருந்தது.
இந்த கணக்கெடுப்பின் படி, பரிஸ் மற்றும் அதன் புறநகரங்களில் (Grand Paris என அழைக்கப்படும் 32 பெரு நகரங்களில்) என மொத்தமாக 3,492 வீடற்றவர்கள் படுத்துறங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை 2023 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 16% சதவீதம் அதிகமாகும்.
பல நூறு தன்னார்வ தொண்டர்கள் கடந்த ஜனவரி 25 ஆம் திகதி இரவு இந்த வீடற்றவர்களை எண்ணும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.