Paristamil Navigation Paristamil advert login

 Instagram-ல் மற்றொரு அற்புதமான அம்சம்

 Instagram-ல் மற்றொரு அற்புதமான அம்சம்

6 மாசி 2024 செவ்வாய் 08:21 | பார்வைகள் : 4613


Instagram அதன் பயனர்களுக்கு மற்றொரு அற்புதமான அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

செய்திகளை அனுப்பிய 15 நிமிடங்களில் திருத்தும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த அம்சம் ஏற்கனவே WhatsApp மற்றும் Telegram போன்ற தளங்களில் உள்ளது.

தவறுதலாக மெசேஜ் அனுப்பியவர்களுக்கு இந்த அம்சம் பெரும் நிவாரணமாக உள்ளது.

தட்டச்சுப் பிழை, பிற தவறுகள், மனமாற்றம் என ஏதேனும் காரணங்களால் செய்தியில் தவறுகள் ஏற்பட்டால், அவற்றை அனுப்பாமல் திருத்தும் வசதி இருக்கும்.

செய்தியைத் திருத்த, Insta ஆப்பைத் திறந்து, உரையாடலில் சமீபத்தில் அனுப்பிய செய்தியைக் கண்டறியவும். பின்னர் செய்தியை அழுத்திப் பிடித்து, தோன்றும் விருப்பங்களில் இருந்து Edit என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

15 நிமிட காலக்கெடுவைத் தாண்டிய பிறகு இந்த விருப்பம் கிடைக்காது என்பதை நினைவில் கொள்ளவும்.

எடிட் என்பதைத் தேர்ந்தெடுத்த பிறகு, நீங்கள் அனுப்பிய செய்தியைத் திருத்தலாம். மாற்றங்களைச் செய்த பிறகு, chatல் உங்கள் செய்தியைப் புதுப்பிக்க Send என்பதைத் தட்டவும்.

வர்த்தக‌ விளம்பரங்கள்