Paristamil Navigation Paristamil advert login

களமிறங்கிய 4வது போட்டியிலேயே  சாதனை படைத்த ரச்சின் ரவீந்திரா

களமிறங்கிய 4வது போட்டியிலேயே  சாதனை படைத்த ரச்சின் ரவீந்திரா

6 மாசி 2024 செவ்வாய் 09:04 | பார்வைகள் : 1799


தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணியின் இளம் வீரர் ரச்சின் ரவீந்திரா இரட்டை சதம் விளாசி அசத்தினார்.

தென்னாப்பிரிக்கா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி Bay Oval மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

இதில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்க அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி, முதல் இன்னிங்ஸின் முதல் பேட்டிங்கில் களமிறங்கிய நியூசிலாந்து அணி 144 ஓவர்கள் முடிவில் 10 விக்கெட்டுகளையும் இழந்து 511 ஓட்டங்கள் குவித்துள்ளது.

நியூசிலாந்து அணியில் அதிகபட்சமாக முன்னாள் கேப்டன் கேன் வில்லியம்சன் 289 பந்துகளில் 16 பவுண்டரிகளுடன் 118 ஓட்டங்கள் குவித்து அசத்தினார்.

நியூசிலாந்து அணியின் இளம் வீரரான ரச்சின் ரவீந்தரா(Rachin Ravindra) டெஸ்ட் போட்டியில் தனது முதல் சதம் மற்றும் முதல் இரட்டை சதத்தை இந்த போட்டியில் நிறைவு செய்தார்.

366 பந்துகளை எதிர்கொண்ட ரச்சின் ரவீந்தரா 26 பவுண்டரிகள், 3 சிக்சர்கள் விளாசி 240 ஓட்டங்கள் குவித்து அசத்தினார்.

டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாளான இன்று 511 ஓட்டங்கள் என்ற முன்னிலையுடன் தென்னாப்பிரிக்க அணி தற்போது களமிறங்கியுள்ளது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்