சுவிட்சர்லாந்தில் அதிகரித்து வரும் மோசடி - பொலிசார் விடுத்துள்ள எச்சரிக்கை
6 மாசி 2024 செவ்வாய் 09:50 | பார்வைகள் : 3388
சுவிட்சர்லாந்தில், அமேசான் நிறுவனத்திடமிருந்து அனுப்பப்பட்டது போன்ற மின்னஞ்சல் மூலம் ஒரு மோசடி இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
அமேசான் நிறுவனத்திடமிருந்து அனுப்பப்பட்டது போன்றதொரு மின்னஞ்சல் மூலம் ஒரு மோசடி நடந்து வருவதாக சுவிஸ் பெடரல் சைபர் கிரைம் பொலிசார் மக்களை எச்சரித்துள்ளார்கள்.
இந்த மோசடியில், அமேசான் நிறுவனம் அனுப்பியது போல் தோன்றும் ஒரு மின்னஞ்சல் அனுப்பப்படுகிற நிலையில்,
அதில் கிரெடிட் கார்டு குறித்த விவரங்களை வெளியிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது,
அமேசான் நிறுவனத்தின் இணையதளம் போலவே தோற்றமளிக்கும் ஒரு இணையதளம் இதற்காக உருவாக்கப்பட்டுள்ளது.
ஆக, தெரியாதவர்கள் தங்கள் கிரெடிட் கார்டு குறித்த விவரங்களை பதிவேற்றம் செய்த அடுத்த நிமிடம், அவர்களுடைய கிரெடிட் கார்டைப் பயன்படுத்தி ஒன்லைன் மூலம் வேறு யாரோ பொருட்கள் வாங்குகிறார்கள் என குற்றசாட்டப்பட்டுள்ளது.
எனவே, அமேசான் ஒரிஜினல் இணையதளத்தை மட்டுமே பயன்படுத்துமாறு மக்களைக் கேட்டுக்கொண்டுள்ள பொலிசார், மின்னஞ்சலில் அனுப்பப்படும் எந்த லிங்கையும் கிளிக் செய்யவேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளார்கள்.
அப்படி ஏதாவது மின்னஞ்சல் வந்தால், உடனடியாக தங்களை அணுகுமாறும் பொலிசார் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்கள்.