83,000 ராக்கெட்டுகளுக்கு கோரிக்கை விடுத்துள்ள உக்ரைன் தளபதி
6 மாசி 2024 செவ்வாய் 10:13 | பார்வைகள் : 2833
உக்ரைன் நாட்டை கைப்பற்றிவதில் ரஷ்யா தமது தாக்குதலை மேற்கொண்டு வருகின்ற நிலையில் அதற்கு பதில் தாக்குதலை உக்ரைன் மேற்கொண்டு வருகின்றது.
கனடாவின் Saskatchewan ராணுவ தளத்தில் பயன்படுத்தாமல் ஒதுக்கப்பட்டுள்ள பல ஆயிரம் ராக்கெட்டுகளை உக்ரைன் தளபதி தங்களுக்கு அளிக்குமாறு கோரியுள்ளார்.
உக்ரைன் தளபதி Kyrylo Budanov கனடா அரசாங்கத்திடம் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
பயன்படுத்தாமல் ஒதுக்கப்பட்டுள்ள CRV7 ராக்கெட்டுகளை தங்களுக்கு அளித்து உதவ வேண்டும் என்றும்,
அதை ரஷ்யாவுக்கு எதிராக உக்ரைன் பயன்படுத்தும் என்றும், அந்த ராக்கெட்டுகளை அழிக்க செலவாகும் கனேடிய மக்களின் வரிப்பணம் வீணாகாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது இருசாராருக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கனடாவின் Saskatchewan ராணுவ தளத்தில் 83,000க்கும் மேற்பட்ட CRV7 ராக்கெட்டுகள் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளது.
கனடா ராணுவம் இனி அந்த ராக்கெட்டுகளை பயன்படுத்தப் போவதில்லை.
இதனால் அந்த ராக்கெட்டுகளை அழிக்க தனியார் ஒப்பந்ததாரர்களை தெரிவு செய்துள்ளனர்.
ஆனால் உக்ரைனுக்கு தற்போது ஆயுதங்கள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதுடன், ரஷ்யாவை எதிர்கொள்ள இந்த ராக்கெட்டுகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றும் அந்த தளபதி குறிப்பிட்டுள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பில் முறையாக கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாகவும், ஆனால் கனடா தரப்பில் இருந்து இதுவரை பதிலேதும் வெளியாகவில்லை என்றும் தளபதி Kyrylo Budanov குறிப்பிட்டுள்ளார்.
கனேடிய அதிகாரிகள் தெரிவிக்கையில், CRV7 ராக்கெட்டுகள் பத்தாண்டுகள் பழமையானவை, தற்போது அதை போருக்கு பயன்படுத்துவது என்பது ஆபத்தில் முடியலாம்.
ஆனால் உக்ரைன் தரப்பில் தெரிவிக்கையில், இதைவிடவும் பழமையான ஆயுதங்களை பயன்படுத்தியிருக்கிறோம், எங்களால் சவாலை எதிர்கொள்ள முடியும் என தெரிவித்துள்ளனர்.
மேலும், அந்த CRV7 ராக்கெட் குவியலில் 8,000 எண்ணிக்கை நல்ல நிலையில் இருப்பதாகவும், போருக்கு அவை பயன்படுத்தலாம் என்றும் எஞ்சிய ராக்கெட் பாகங்களை ட்ரோன் திட்டத்திற்கும் பயன்படுத்தலாம் என்று விளக்கமளித்துள்ளனர்.
83,000 CRV7 ராக்கெட்டுகளை அழிக்க மக்கள் வரிப்பணத்தில் பல மில்லியன் செலவிட நேரும் என்றே கூறப்படுகிறது.