Paristamil Navigation Paristamil advert login

கனடாவில் விசித்திரமான சம்பவம்.. பால் குடித்த நபருக்கு விதிக்கப்பட்ட அபராதம்!

கனடாவில்  விசித்திரமான சம்பவம்.. பால் குடித்த நபருக்கு விதிக்கப்பட்ட அபராதம்!

31 ஆடி 2023 திங்கள் 06:47 | பார்வைகள் : 3122


கனடாவில் பிரிட்டிஷ் கொலம்பியாவில் மைக்ரோஸ் என்ற ரியல் எஸ்டேட் முகவர் வீடுகளை மற்றவருக்கு காண்பிப்பதை தொழிலாக கொண்டிருந்தார்.

இவர், விற்பனைக்காக வீடு ஒன்றை சிலருக்கு காண்பிப்பதற்காக சென்றிருந்தார்.


இந்த ரியல் எஸ்டேட் முகவர், வீடு காண்பிப்பதற்கு சென்றிருந்த போது வீட்டு உரிமையாளரின் அனுமதியின்றி குளிர்சாதன பெட்டியில் உள்ள பாலை குடித்ததாக கூறப்படுகிறது.

அதாவது, அவர் குளிர்சாதன பெட்டியை திறந்து தண்ணீர் குடிக்க நினைத்துள்ளார்.

ஆனால், குளிசாதன பெட்டியில் தண்ணீர் இல்லாதால் அதிலிருந்த பாலை எடுத்து கொஞ்சம் குடித்துள்ளார்.

மீதமிருந்த பாலை குளிசாதான பெட்டியின் உள்ளே வைத்துள்ளார்.

இந்நிலையில், ரியல் எஸ்டேட் முகவர் குளிர்சாதன பெட்டியில் இருந்து பாலை குடித்தது வீட்டின் உரிமையாளருக்கு சிசிடிவி காட்சி மூலம் தெரியவந்துள்ளது.

இதனால், வீட்டின் உரிமையாளர் ரியல் எஸ்டேட் நிறுவனம் மீது புகார் அளித்திருந்தார்.

இதனையடுத்து, மைக்ரோஸ் என்ற ரியல் எஸ்டேட் முகவருக்கு 20,000 டொலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 
 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்