இலங்கையில் அமுலுக்குவரவுள்ள புதிய நடைமுறை
6 மாசி 2024 செவ்வாய் 12:30 | பார்வைகள் : 3204
இலங்கையில் சிவில் குற்றங்களில் ஈடுபடுகின்றவர்களை வீட்டுக் காவலில் வைக்கும் நடைமுறை இலங்கையில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
இராஜாங்க அமைச்சர் அனுராதா ஜயரத்ன இதனைத் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு வீட்டுக் காவலில் வைக்கப்படுகின்றவர்கள் ஜீ.பி.எஸ் தொழில்நுட்பத்தின் மூலம் கண்காணிக்கப்படுவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் அவர்கள் சிறை அதிகாரிகள் மற்றும் அண்மையில் உள்ள பொலிஸ் நிலையத்தின் கண்காணிப்பிலும் இருப்பார்கள்.
இதற்கான சட்ட வரைபு நடவடிக்கைகள் இடம்பெறுவதாகவும், விரைவில் இந்த சட்ட மூலம் பாராளுமன்றில் முன்வைக்கப்படும் என்றும் இராஜாங்க அமைச்சர் கூறியுள்ளார்.