103 புதிய தொடருந்துகளை வாங்கும் இல் து பிரான்ஸ் பொது போக்குவரத்துச் சபை!!

6 மாசி 2024 செவ்வாய் 13:25 | பார்வைகள் : 9862
இல் து பிரான்ஸ் பொது போக்குவரத்துச் சபை (Île-de-France Mobilités) புதிதாக 103 தொடருந்துகளை வாங்க உள்ளது.
8 ஆம், 12 ஆம் மற்றும் 13 ஆம் இலக்க மெற்றோ சேவைகளுக்காக இந்த தொடருந்துகள் வாங்கப்பட உள்ளன. இதற்காக €1.1 பில்லியன் யூரோக்கள் நிதி ஒதுக்கியுள்ளது. 2027 ஆம் ஆண்டில் இருந்து 2029 ஆம் ஆண்டுக்குள் இந்த தொடர்ந்துகள் அனைத்தும் விநியோகிக்கப்பட வேண்டும் என ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.
MF19 ரக தொடருந்துகள் USB வழியாக இலத்திரனியல் பொருட்களுக்கு மின்னேற்றக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025