Paristamil Navigation Paristamil advert login

தளபதி 69 படத்தை இயக்குவது இவரா?

தளபதி 69 படத்தை இயக்குவது இவரா?

6 மாசி 2024 செவ்வாய் 14:08 | பார்வைகள் : 2389


விஜய்யின் அடுத்த படத்தை இயக்க கிட்டத்தட்ட எட்டு இயக்குனர்கள் காத்திருக்கும் நிலையில் விஜய்யின் ‘தளபதி 69’ படத்தை இயக்குனர் வெற்றிமாறன் இயக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

தளபதி விஜய், தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கிவிட்ட நிலையில் இன்னும் ஒரே இந்த ஒரு படத்தில் மட்டுமே அவர் நடிக்கவுள்ளார். இந்த படத்தை இயக்க கார்த்திக் சுப்புராஜ், அட்லி, வெற்றிமாறன், எச் வினோத், வம்சி உள்ளிட்ட 8 இயக்குனர்கள் காத்திருப்பதாகவும் இவர்களில் யாரை விஜய் தேர்வு செய்வார் என்பது குறித்த தகவல் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் கூறப்பட்டது.

இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவல்படி விஜய்யின் 69வது படத்தை வெற்றிமாறன் இயக்குவது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. விஜய்யிடம் ஏற்கனவே வெற்றிமாறன் கதை சொல்லி ஒப்புதல் பெற்றிருப்பதாகவும் அந்த படத்தை தான் வெற்றிமாறன் இயக்குவார் என்றும் கூறப்படுகிறது.

அப்படியானால் ’விடுதலை 2’ படத்தை முடித்துவிட்டு சூர்யா நடிக்கும் ’வாடிவாசல்’ படம் தள்ளி போகுமா என்ற கேள்வியும் தற்போது எழுந்துள்ளது. இருப்பினும் விஜய்யின் ‘தளபதி 69’படத்தை இயக்குவது யார் என்பதை அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் வரை பொறுமை காப்போம்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்