காவல்நிலையத்தின் இரண்டாவது தளத்தில் இருந்து குதித்த திருடன்! - தோல்வியில் முடிந்த தப்பிக்கும் முயற்சி!

6 மாசி 2024 செவ்வாய் 17:38 | பார்வைகள் : 8007
காவல்நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த திருடன் ஒருவர் மேற்கொண்ட தப்பிக்கும் முயற்சி தோல்வியில் முடிந்துள்ளது. காவல்நிலையத்தின் இரண்டாவது தளத்தில் இருந்து குதித்ததில் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Toulouse (Haute-Garonne) நகர காவல்நிலையத்தில் இச்சம்பவம் பெப்ரவரி 4, ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. திருடிய குற்றம் ஒன்றுக்காக கைது செய்யப்பட்டு குறித்த காவல்நிலையத்தில் திருடன் ஒருவர் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், அவர் அங்கிருந்து தப்பிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இரண்டாவது தளத்தின் ஜன்னல் வழியாக வெளியே பாய்ந்துள்ளார்.
ஆனால் துரதிஷ்ட்டமாக அந்த முயற்சி பலனளிக்கவில்லை. அவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டது. தீயணைப்பு வீரர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.