Paristamil Navigation Paristamil advert login

விபத்து ஏற்படுத்தி குழந்தைகளை விட்டுவிட்டுத் தப்பியோட்டம்!!

விபத்து ஏற்படுத்தி குழந்தைகளை விட்டுவிட்டுத் தப்பியோட்டம்!!

6 மாசி 2024 செவ்வாய் 18:27 | பார்வைகள் : 10065


விபத்து ஒன்றை ஏற்படுத்திக் காயப்படுத்தி விட்டுத் தப்பியோடியதுடன், ஆபத்திலிருந்தவரிற்கு உதவாமல் சென்றமைக்காக 44 வயதுடைய ஒரு நபரிற்கு  Saint-Nazaire (Loire-Atlantique) நீதிமன்றம் 12 மாதச் சிறைத்தண்டனை விதித்துள்ளது.

பிராந்தியசாலை D33 இல் அதிவேகத்திவ் சிற்றுந்தைச் செலுத்திய இவர், கட்டுப்பாட்டை இழந்து எதிரில் வந்த வாகனத்தில மோதியதுடன் வாகனம் தலைகீழாக பிரண்டுள்ளது.

இவர் மோதிய, எதிரில் வந்த வாகனத்தில் வந்தவரும் படு காயமடைந்த நிலையில், அவரிற்கு உதவி செய்யாமல், இந்த வாகனச் சாரதி, தலைகீழாக பிரண்ட தனது சிற்றுந்தில் இருந்து வெளியேறித் தப்பியோடி உள்ளார்.

தன் பிள்ளைகள் இருவரையும் விபத்தான சிற்றந்திற்குள் விட்டு விட்டே இவர் தப்பியோடி உள்ளார்.

அங்கு வந்த முதலுதவிப்படையினர் இந்தக் குழந்தைகளை மீட்டு வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றுள்ளனர்.

விபத்தை ஏற்படுத்திய வாகனச்சாரதியிடம் வாகனக்காப்புறுதியும் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
 

6 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்

சதீஸ்குமார் அபிசன்

வயது : 21

இறப்பு : 07 Dec 2025

  • Ecology

    2

வர்த்தக‌ விளம்பரங்கள்