Villeparisis : 430 கிலோ கஞ்சா, ஆயுதங்கள், 200,000 யூரோ பணம் மீட்பு!!

6 மாசி 2024 செவ்வாய் 18:34 | பார்வைகள் : 8362
போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட நால்வர் கொண்ட குழுவை Seine-et-Marne மாவட்ட காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
Villeparisis நகரில் உள்ள வீடொன்றினை தலைமையிடமாக கொண்டு இயங்கிய குறித்த குழுவினை காவல்துறையினர் கைது செய்துள்ளதோடு, அவர்களிடம் இருந்து 430 கிலோ எடையுள்ள கஞ்சா போதைப்பொருளையும், துப்பாக்கிகள் சிலவற்றையும், 200,000 யூரோக்கள் பணத்தினையும் பறிமுதல் செய்தனர். இந்த போதைப்பொருள் Villeparisis நகரிலும் Sevran நகரிலும் என இரு வேறு இடங்களில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
கடந்த பல மாதங்களாக இடம்பெற்றுவந்த விசாரணைகளை அடுத்தே இக்கைது சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கைது செய்யப்பட்ட நால்வரில் இருவர் விடுவிக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025
-
1