Paristamil Navigation Paristamil advert login

சர்வதேச விவசாயக்கண்காட்சி! - சனிக்கிழமை ஆரம்பம்!

சர்வதேச விவசாயக்கண்காட்சி! - சனிக்கிழமை ஆரம்பம்!

6 மாசி 2024 செவ்வாய் 19:21 | பார்வைகள் : 6341


இவ்வருடத்துக்கான விவசாயக்கண்காட்சி (Salon International de l’Agriculture) வரும் பெப்ரவரி 24 ஆம் திகதி சனிக்கிழமை ஆரம்பமாகிறது.

ஆண்டு தோறும் பரிசில் இடம்பெறும் இந்த கண்காட்சியில் நாடு முழுவதும் உள்ள விவசாயிகள், கால்நடை பண்ணையாளர்கள், கைவினை உற்பத்தியாளர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்கின்றனர். Expo Porte de Versailles பகுதியில் பெப்ரவரி 24 ஆம் திகதி முதல் மார்ச் 3 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வரை இடம்பெற உள்ளது.

அறுபதாவது ஆண்டாக இந்த கண்காட்சி இவ்வருடம் இடம்பெற உள்ளது. ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் ஆரம்பநாளில் இந்த கண்காட்சியில் கலந்துகொண்டு அனைத்து கண்காட்சி பொருட்களையும் பார்வையிடுவார். நாள் முழுவதும் அங்கு செலவிடுவார் என அறிய முடிகிறது.

என்றும் இல்லாதவாறு இவ்வருடம் விவசாயிகளின் ஆர்ப்பாட்டம் பிரான்சில் வலுத்துள்ளது. இந்நிலையில் இந்த சர்வதேச விவசாயக் கண்காட்சி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்