Paristamil Navigation Paristamil advert login

ஒவ்வொரு நிற ரோஜாப்பூவுக்கும் என்ன அர்த்தம்...

ஒவ்வொரு நிற ரோஜாப்பூவுக்கும் என்ன அர்த்தம்...

7 மாசி 2024 புதன் 06:18 | பார்வைகள் : 2196


காதலர் வாரத்தின் முதல் நாள் கொண்டாடப்படுவது தான் ரோஸ் டே என்னும் ரோஜா தினம். பொதுவாக காதல் என்றால் அதில் ரோஜா பூக்கள் முக்கிய பங்கை வகிக்கும். பாரம்பரியமாக காதலை தெரிவிக்கும் போது, ரோஜாப் பூவைக் கொடுத்து தான் காதலை தெரிவிப்போம். ஆனால் அந்த ரோஜாப்பூவில் பல்வேறு நிறங்கள் உள்ளன. அதில் ஒவ்வொரு நிறமும் ஒவ்வொரு அர்த்தத்தைக் கொண்டுள்ளன.

நீங்கள் எந்த மாதிரியான உணர்வுகளை வெளிப்படுத்த நினைக்கிறீர்களோ, அந்த நிற ரோஜாப்பூக்களை உங்கள் மனதிற்கு பிடித்தவருக்கு கொடுக்கலாம். அதாவது, சிவப்பு நிற ரோஜாப் பூக்கள் காதலை வெளிப்படுத்துகிறது, அதேப் போல் மஞ்சள் நிறம், வெள்ளை நிறம், பிங்க் நிறம் போன்றவை ஒவ்வொரு அர்த்தங்களைக் கொண்டுள்ளன.

நீங்கள் இந்த காதலர் தினம் அல்லது ரோஜா தினத்தன்று உங்கள் மனதிற்கு பிடித்தவரிடம் ரோஜா பூக்களின் மூலம் உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்துங்கள். இப்போது ரோஜாப்பூக்களின் நிறங்களையும், அவற்றின் அர்த்தங்களையும் காண்போம்.

சிவப்பு ரோஜா

காதல் என்றால் சிவப்பு நிற ரோஜாக்கள் தான் முதலில் நினைவிற்கு வரும். ஏனெனில் சிவப்பு நிற ரோஜாவானது காதல் மற்றும் ஆர்வத்தைக் குறிக்கிறது. எனவே நீங்கள் காதலை தெரிவிக்க விரும்பினால் சிவப்பு நிற ரோஜாக்களைப் பயன்படுத்தலாம்.

வெள்ளை நிற ரோஜா

வெள்ளை நிற ரோஜாக்கள் காதல், மரியாதை ஆகியவற்றைக் குறிக்கிறது. பெரும்பாலும் இம்மாதிரியான ரோஜாக்கள் அலங்காரங்களில் பயன்படுத்தப்படும். இந்த நிற ரோஜாக்கள் நீங்கள் உங்கள் வாழ்வில் அதிகம் மதிக்கும் ஒருவருக்கு மரியாதையை தெரிவிக்கும் வகையில் இதைக் கொடுக்கலாம்.

மஞ்சள் நிற ரோஜா

மஞ்சள் நிற ரோஜாக்கள் நட்பு, அரவணைப்பு, மகிழ்ச்சி மற்றும் ஒரு நல்ல அதிர்வுகளைக் குறிக்கிறது. பெரும்பாலும் இந்த மாதிரியான மஞ்சள் நிற ரோஜாக்கள் நண்பர்களுக்கு கொடுக்கப்படுவதுண்டு. நீங்கள் உங்கள் நண்பனிடம் உங்கள் அன்பை அல்லது அவர் உங்களுக்கு எவ்வளவு சிறப்பானவர் என்பதை வெளிப்படுத்த நினைத்தால், இந்த நிற ரோஜாவைக் கொடுக்கலாம்.

நீல நிற ரோஜா

நீற நிறமானது சென்சிட்டிவிட்டி மற்றும் உணர்ச்சியின் வலிமையைக் குறிக்கிறது. இந்த நீல நிற ரோஜாப் பூக்களை நீங்கள் யாருடைய செயலால் அதிகம் உணர்ச்சிவசப்படுகிறீர்களோ அவர்களுக்கு இந்த நிற ரோஜாப் ழுக்களைக் கொடுக்கலாம்.

பீச் நிற ரோஜா

பீச் நிறமானது அனுதாபம், அடக்கம் மற்றும் நேர்மையைக் குறிக்கிறது. காதலிப்பவர்கள் சிவப்பு நிற ரோஜாவிற்கு அடுத்தப்படியாக பீச் நிற ரோஜா பூக்களைக் கொடுக்கலாம். ஏனெனில் இது ஒரு உறவில் இருக்கும் நேர்மையை வெளிப்படுத்துகிறது.

பிங்க் நிற ரோஜா

பிங்க் நிற ரோஜா பெண்மை, நேர்த்தி மற்றும் அழகு ஆகியவற்றைக் குறிக்கிறது. ஒருவரின் நேர்த்தி மற்றும் அழகை விரும்பும் போது, அவர்களுக்கு இந்த பிங்க் நிற ரோஜாப் பூக்களை ஒரு அன்புப் பரிசாக கொடுக்கலாம்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்