குறைவான மாசடைவை ஏற்படுத்தும் பேருந்துகளை வாங்கும் Ile-de-France Mobilités!
7 மாசி 2024 புதன் 06:22 | பார்வைகள் : 3911
குறைவான மாசடைவை ஏற்படுத்தும் பேருந்துகளை கொள்முதல் செய்ய உள்ளதாக இல் து பிரான்சுக்கான பொது போக்குவரத்துச் சபை (Ile-de-France Mobilités) அறிவித்துள்ளது.
மொத்தமாக 3,500 பேருந்துகளை வாங்க உள்ளது. 2025 ஆம் ஆண்டில் இருந்து 2028 ஆம் ஆண்டுக்குள் அவை சேவைக்கு வரும் எனவும், ஆண்டுக்கு 1,000 பேருந்துகள் வீதம் சேவைக்கு கொண்டுவரப்பட்டு, தற்போது பாவனையில் உள்ள மாசடவைவு அதிகம் வெளியிடும் பேருந்துகள் சேவையில் இருந்து அகற்றப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காக 1.8 மில்லியன் யூரோக்கள் நிதியினை போக்குவரத்துச் சபை ஒதுக்கியுள்ளது.
இல் து பிரான்சுக்குள் தற்போது 4,200 குறைந்த மாசடைவை ஏற்படுத்தும் பேருந்துகள் சேவையில் உள்ளன. மீதமுள்ள பேருந்துகளும் இந்த புதிய பேருந்துகளால் மாற்றப்பட உள்ளன.