யாழ்ப்பாணம் உட்பட 5 மாவட்டங்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு

8 ஆவணி 2023 செவ்வாய் 03:17 | பார்வைகள் : 9331
யாழ்ப்பாணம், குருநாகல், புத்தளம், திருகோணமலை மற்றும் இரத்தினபுரி ஆகிய ஐந்து மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் ஓரு இலட்சம் பேர் முறையான குடிநீரின்றி பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக நாடு முழுவதும் உள்ள சுமார் 50 ஆயிரம் விவசாயிகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
அதேநேரம், வில்பத்து தேசிய பூங்காவில் உள்ள 106 சிறிய நீரோடைகளில் நீர் குறைவடைந்துள்ள நிலையில், விலங்குகளும் பாதிக்கப்பட்டுள்ளன.
குறித்த பகுதியில் உள்ள விலங்குகளுக்கு போதுமான நீர் இல்லை. இதேவேளை, பிரதான நீர்த்தேக்கங்களின் நீர் மட்டமும் குறைவடைந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1