Paristamil Navigation Paristamil advert login

வெடுக்குநாறிமலை ஆலய வளாகத்தில் குழப்பநிலை

வெடுக்குநாறிமலை ஆலய வளாகத்தில் குழப்பநிலை

8 பங்குனி 2024 வெள்ளி 09:30 | பார்வைகள் : 2385


வெடுக்குநாறிமலையில் ஐஸ்கிறீம் வியாபாரத்தில் ஈடுபட்ட வியாபாரியினை பொலிஸார் கலைத்தமையால் ஆலய வளாகத்தில் குழப்பநிலை ஏற்பட்டது. 

சிவராத்திரி வழிபாடுகளை மேற்கொள்ளச்சென்ற பொதுமக்களுக்கு பொலிஸாரால் பல்வேறு அசௌகரியங்கள் ஏற்படுத்தப்பட்டது. தற்போது ஆலய வளாகத்தில் ஐஸ் கிறீம் வியாபாரத்தில் ஈடுபட்ட வியாபாரி ஒருவரை பொலிஸார் விற்பனையில் ஈடுபட வேண்டாம் என தெரிவித்து ஆலயவளாகத்தை விட்டு அகற்றியுள்ளார். இதனால் பொதுமக்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் குழப்பநிலை ஏற்ப்பட்டுள்ளது.
 
வவுனியா - வெடுக்குநாறி ஆலய பூசகர் உட்பட நிர்வாகசபை உறுப்பினர் இருவரும் வவுனியா நீதவான் நீதமன்றத்தினால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

அந்த வகையில் இருவரும் ஒரு இலட்ச ரூபா சரீர பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சிவராத்திரி பூஜைக்கான ஒழுங்கமைப்பில் ஈடுபட்டிருந்த வவுனியா வெடுக்குநாறி ஆலய பூசகர் உட்பட நிர்வாகசபை உறுப்பினர் ஒருவரும் நேற்று பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிட்டக்கது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்