Paristamil Navigation Paristamil advert login

CSK கேப்டன் தோனியின் மிரளவைக்கும் சொத்து மதிப்பு

CSK கேப்டன் தோனியின் மிரளவைக்கும் சொத்து மதிப்பு

8 பங்குனி 2024 வெள்ளி 09:26 | பார்வைகள் : 1915


இந்தியா கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரராகவும் 3 விதமான ஐசிசி போட்டிகளிலும் இந்தியாவிற்கு கோப்பைகளைப் பெற்று தந்தவர் மகேந்திர சிங் தோனி.

உடற்பயிற்சி பிரியரான தோனி இந்தியா முழுக்கவே பல்வேறு உடற்பயிற்சி கூடத்தைச் சொந்தமாக நடத்தி வருகிறார்.

அந்த வகையில் Sports Fit World என்ற உடற்பயிற்சி கூடத்தின் உரிமையாளர் தோனிதான் என்று கூறப்படுகிறது. 

மேலும் கால்பந்து விளையாட்டின் மீது ஆர்வம் கொண்ட அவர் சென்னை FC அணி உரிமையாளர்களுள் ஒருவராக இருந்து வருகிறார்.

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வுப்பெற்று IPL போட்டிகளுக்காக Chennai Super Kings அணிக்காக விளையாடிவரும் இவருக்கு அந்த அணி ரூ.12 கோடி ஊதியத்தைக் கொடுக்கிறது.

மேலும் இந்தியா சிமெண்ட்ஸ் நிர்வாகிகளில் ஒருவராக இருக்கும் தோனி அதன் மூலமாகவும் வருமானம் ஈட்டி வருகிறார்.

ராஞ்சியில் உள்ள அவரது பண் வீடு 7 ஏக்கரிலும் மிகப் பிரம்மாண்டமாக இருக்கிறது.

இதில் விளையும் பொருட்கள் நேரடியாக ஏற்றுமதி செய்யப்பட்டு அதன் மூலமாக தோனிக்கு வருமானம் கிடைத்து வருகிறது.

மேலும், தோனிக்கு மும்பை மற்றும் பூனே பகுதிகளில் பிரம்மாண்ட பங்களா வீடுகள் இருக்கின்றன.

மேலும் பூனே கடற்கரையை ஒட்டி தோனி புதிய வீட்டை கட்டி வருவதாக அவருடைய மனைவி சாக்ஷி தோனி சமீபத்தில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் வெளியிட்டிருந்தார். 

இந்நிலையில் சமீபத்தில் தோனி எண்டர்டெயின்மெண்ட் என்ற தயாரிப்பு நிறுவனம் ஒன்றை துவங்கியுள்ளார். மேலும் இந்த நிறுவனம் விளம்பரப்படங்களைத் தயாரிப்பதிலும் அதிக ஆர்வம் காட்டி வருகிறது.

பைக் பிரியரான தோனி அவர் சேகரிப்பில் பழமையான பைக் முதல் சமீபத்தில் மார்கெட்டில் வந்திருக்கும் பைக்குகள் வரை விலைமதிப்பற்ற பல பைக்குகள் இருக்கின்றன.

மேலும் விலைமதிப்பற்ற பல கார்களையும் அவர் தன்னுடைய சேகரிப்பில் வைத்திருக்கிறார்.


இப்படி பல அவதாரங்களை கொண்டிருக்கும் தோனியின் சொத்து மதிப்பு ரூ.1,040 கோடி எனக் கூறப்படுகிறது.   

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்