தமிழக வெற்றிக் கழகத்தின் செயலி அறிமுகம்- 2 கோடி உறுப்பினர்களை சேர்க்க இலக்கு

8 பங்குனி 2024 வெள்ளி 14:30 | பார்வைகள் : 7870
நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி 2 ஆம் தேதி, தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கினார். இதையடுத்து, கட்சியின் சின்னம், கொடி உள்ளிட்டவை தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து கட்சி நிர்வாகிகளுடன் அடிக்கடி ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
மேலும், கட்சியில் உறுப்பினர் சேர்க்கையை 2 கோடியாக அதிகரிக்க வேண்டும் என்று கட்சியினருக்கு அறிவுறுத்தியதுடன், அதற்கான செயலி விரைவில் அறிமுகம் செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. அதன்படி, இன்று தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் சேருவதற்கான இணையதள லிங்க்-வெளியாகியுள்ளது. இந்த லிங்கை வெளியிட்ட நடிகர் விஜய், தனது கட்சியின் முதல் நபராக சேர்ந்தார். மேலும், விருப்பப்படுவர்கள் அனைவரும் கட்சியில் இணையுமாறும் வீடியோ வாயிலாக விஜய் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025