Paristamil Navigation Paristamil advert login

இலங்கையில் வெப்பமான காலநிலை - மனநலம் பாதிப்படையும் சாத்தியம்!

இலங்கையில் வெப்பமான காலநிலை - மனநலம் பாதிப்படையும் சாத்தியம்!

8 பங்குனி 2024 வெள்ளி 14:44 | பார்வைகள் : 5984


இலங்கையில் வெப்பமான காலநிலை காரணமாக மனநலமும் கடுமையாக பாதிக்கப்படுவதாக மனநல மருத்துவர்கள் கூறுகின்றனர்.

இந்த நாட்களில் குடும்ப வன்முறைகளும் அதிகரித்துள்ளதாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் கல்வி மனநல கற்கைகள் பிரிவின் தலைவர் சிந்தக சந்திரகுமார தெரிவித்துள்ளார்.

இலங்கையில் நிலவி வரும் கடும் வெப்பமான காலநிலை காரணமாக மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

இந்தநிலை மன ஆரோக்கியத்தில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்துவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
 

வர்த்தக‌ விளம்பரங்கள்