குப்பைகளை கரையேற்றிய சென் நதி!
8 பங்குனி 2024 வெள்ளி 19:19 | பார்வைகள் : 5131
சென் நதியின் நீர்மட்டம் உயர்ந்து, சில வீதிகளில் தண்ணீர் பெருக்கெடுத்திருந்தமை அறிந்ததே. சென் நதியில் தேங்கிய குப்பைக்கூழங்கள் வீதிக்கருகில் கரையொதுங்கியுள்ளது.
டயர்கள், நெகிழி போத்தல்கள், பழுதடைந்த உதை பந்துகள், நெகிழி பொதிகள் என கழிவுகள் கரை ஒதுங்கியுள்ளதாக Yvelines மாவட்டத்தில் வசிக்கும் மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.
Port-Marly நகரசபையில் கட்டுப்பாட்டுக்குள் உள்ள Île de la Loge பகுதியில் குப்பை கூழங்கள் கரை ஒதுங்கியுள்ளதை மேலே புகைப்படத்தில் காண்கின்றீர்கள்.
சென் நதியின் நீர்மட்டம் இந்த வாரத்தில் 4 மீற்றர் உயரத்தினை தொட்டிருந்தது. அதையடுத்தே இந்த கழிவுகள் கரை ஒதுங்கியுள்ளன.
அதேவேளை, சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக போராடும் OSE எனும் அமைப்பு கடந்த 2023 ஆம் ஆண்டில் 100 தொன் கழிவுகளை சென் நதியில் இருந்து மீட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.