உக்ரேனுக்கு உதவுவதில் எந்த எல்லைகளும் இல்லை! - ஜனாதிபதி மக்ரோன்!
9 பங்குனி 2024 சனி 07:00 | பார்வைகள் : 5362
இரஷ்ய-உக்ரேன் மோதலில் உக்ரேனின் பக்கம் இருக்கும் பிரான்ஸ், தொடர்ந்து இரஷ்யாவுக்கு அழுத்தம் கொடுத்து வருகிறது.. உக்ரேனுக்கு தேவையான ஆயுதங்கள் உள்ளிட்ட ஆதரவு வழங்குவதில் ‘எந்த எல்லைகளும் இல்லை’ என ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் தெரிவித்துள்ளார்.
’உக்ரேனுக்கு வழங்கப்படும் உதவியினால் இந்த யுத்தம் அணு ஆயுத தாக்குதலுக்கு வழி வகுக்கும்’ என இரஷ்ய அதிபர் புட்டின் சில நாட்களுக்கு முன்னர் தெரிவித்திருந்தார். அவரது இந்த அறிவித்தல், உலக நாடுகளிடம் பல சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.
பிரான்ஸ் அதிபர் இம்மானுவல் மக்ரோன் இது தொடர்பில் தெரிவிக்கையில், ‘இந்த போரியில் இரஷ்யா வெற்றிபெறுவதை தடுப்பதற்கான அனைத்து வழிகளையும் பின்பற்றுவோம். உக்ரேனுக்கு ஆதரவு வழங்குவதில் எந்த வரையறையும் இல்லை. பிரான்ஸ் இரஷ்யாவுடன் போரில் குதிக்கவில்லை. ஆனால் இந்த யுத்தத்தில் இரஷ்யாவை வெற்றிபெறச் செய்வதை விரும்பவில்லை’ என தெரிவித்தார்.