Paristamil Navigation Paristamil advert login

கனடாவில் கோர விபத்து...!மூடப்பட்டுள்ள 401 நெடுஞ்சாலை

கனடாவில் கோர விபத்து...!மூடப்பட்டுள்ள 401 நெடுஞ்சாலை

9 பங்குனி 2024 சனி 07:56 | பார்வைகள் : 7303


கனடா - டொராண்டோவில் காகிதம் கொண்டு செல்லும் டிரக் ரக வாகனம் விபத்துக்குள்ளாகி தீப்பிடித்து இருந்தது.

 டொராண்டோவில் உள்ள நெடுஞ்சாலை 401யின் பரபரப்பான பகுதி மூடப்பட்டிருந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த விபத்தானது நேற்று(08) இடம்பெற்றதோடு, வாகன சாரதி எந்த வித பாதிப்பும் இன்றி மீட்கப்பட்டதாக டொராண்டோ தீயணைப்பு சேவை கூறியுள்ளது.

டொராண்டோவின் நெடுஞ்சாலை 401 இன் மேற்கு நோக்கி செல்லும் அனைத்து அதிவேக பாதைகள் நேற்று 08 ஆம் திகதி காலையில் பல மணி நேரம் மூடப்பட்டிருந்ததுடன் காலை 9:30 மணியளவில் மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் சுமார் 20 தீயணைப்பு வாகனங்கள் தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரும் முயற்சியில் ஈடுப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.

அத்தோடு, தீ கட்டுப்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டமையை அடுத்து வாகனத்தை அப்புறப்படுத்தியுள்ளனர்.

மேலும் விபத்திற்கான காரணம் தொடர்பில் அந்த பகுதி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

---

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்