Paristamil Navigation Paristamil advert login

 சுவிட்சர்லாந்தில் வீடு பற்றாக்குறை பிரச்சினைக்கு தீர்வு

 சுவிட்சர்லாந்தில் வீடு பற்றாக்குறை பிரச்சினைக்கு தீர்வு

9 பங்குனி 2024 சனி 09:21 | பார்வைகள் : 4316


சுவிட்சர்லாந்தின் ஜெனீவா மாகாணத்தில், வீடுகள் பற்றாக்குறை நிலவி வருகின்றது.

 இந்நிலையில், வீடுகள் பற்றாக்குறை பிரச்சினையைத் தீர்க்க யோசனை ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது.

ஜெனீவாவில் பல பெரிய வீடுகளில் முதியவர்கள் இரண்டு பேர் மட்டும் வாழ்ந்துவரும் ஒரு நிலைமை காணப்படுகிறது. 

அதாவது, பிள்ளைகளுடன் வாழ்ந்து வந்த தம்பதியர், தங்கள் பிள்ளைகள் வளர்ந்து திருமணமாகி தனியாக சென்ற பிறகும், தாங்கள் வாழ்ந்த வீட்டைப் பிரிய மனமில்லாமல் அந்த வீட்டிலேயே தொடர்ந்து வாழ்கிறார்கள்.

ஆக, தங்கள் தேவைக்கு மீறிய பெரிய வீடுகளில் இதுபோல முதியவர்கள் பலர் வாழ்ந்துவருகிறார்கள்.

 இன்னொரு பக்கமோ, வீடு கிடைக்காமல் பலர் திண்டாடிவருகிறார்கள்.

ஆக, வீடுகள் பற்றாக்குறையை சமாளிக்க ஒரு யோசனை முன்வைக்கப்பட்டு, பரவலாக அதற்கு ஆதரவும் தெரிவிக்கப்பட்டுவருகிறது.

அதாவது, இப்படி தேவைக்கு அதிகமான பெரிய வீடுகளில் வாழ்வோர், சிறிய வீடுகளுக்குச் செல்லவேண்டும். ஒரு வீட்டில் எத்தனை பேர் வாழ்கிறார்களோ, அவர்களுடைய எண்ணிக்கைக்கு ஏற்ப வாடகை வசூலிக்கப்படும்.

அப்படி ஒரு முதிய தம்பதி ஒரு சிறிய வீட்டுக்கு குடிபெயரும் பட்சத்தில், அவர்கள் முன்பை விட குறைந்த வாடகை செலுத்தினால் போதும். அவர்களுக்கும் பணம் மிச்சம், வீடு கிடைக்காமல் திண்டாடுவோருக்கும் விடு வாடகைக்குக் கிடைக்கும்.

இந்த திட்டம் நாடு முழுவதும் வெற்றிகரமாக நிறைவேற்றப்படுமானால், வங்கி ஒன்றின் ஆய்வு முடிவுகளின்படி, சுமார் 450,000 பேருக்கு வாழ வீடு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.


 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்