Paristamil Navigation Paristamil advert login

அமெரிக்காவின் 10 மாகாணங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

அமெரிக்காவின் 10 மாகாணங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

8 ஆவணி 2023 செவ்வாய் 09:41 | பார்வைகள் : 4915


அமெரிக்காவின் 10 மாகாணங்களுக்கு  சூறாவளி புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மத்திய-அட்லாண்டிக் பெருங்கடலில் உருவான இந்த சூறாவளி , தலைநகர் வாஷிங்டன், நியூயார்க், டென்னிசி, பிலடெல்பியா, அரிசோனா, நியூ மெக்சிகோ உள்பட 10 மாகாணங்களை சூறாவளி புயல் தாக்கியது.

பலத்த காற்று காரணமாக மரங்கள், மின் கம்பங்கள் சரிந்து விழுந்ததுடன் பல இடங்களில் வெள்ளம் கரை புரண்டு ஓடிய நிலையில்  மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

இதனால் 10 லட்சம் வீடுகள் இருளில் மூழ்கின. புயல் தொடர்பாக தேசிய வானிலை மையம் கூறுகையில்,

சூறாவளி, ஆலங்கட்டி மழை, மின்னல் உள்ளிட்ட அபாயங்கள் இருப்பதால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக்கொண்டனர்.

வாஷிங்டன்-பால்டி மோர் பிராந்தியம், புயல் தாக்குதலில் முக்கிய பகுதியாக உள்ளது என்று எச்சரிக்கை விடுத்தது.

இந்த புயல் காரணமாக இன்று வரை வெள்ள அபாய எச்சரிக்கை நீடிப்பதாகவும் தெரிவித்துள்ளது.

ஆயிரக்கணக்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. அதேசமயம் இடியுடன் கூடிய மழை காரணமாக நியூயார்க் வாஷிங்டன், பில்டெல்பியா அட்லாண்டா, பால்டிமோர் விமான நிலையங்களில் விமானங்கள் புறப்படுவதை நிறுத்தி வைக்க மத்திய விமான போக்குவரத்து நிர்வாகம் உத்தரவிட்டது.

மேலும் 2600-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

7,700 விமானங்கள் தாமதமாக வந்ததாகவும் கூறப்படுகின்றது. இந்நிலையில் புயல் மற்றும் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் முன்னெடுக்கபப்டுவதாகவும் கூறப்படுகின்றது.  

 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்