Paristamil Navigation Paristamil advert login

இஸ்லாமிய மதத்தினரின் நோன்பு இன்று ஆரம்பிக்க இருக்கும் நிலையில் பிரான்ஸ் மருத்துவச் சமுகம் விடுத்துள்ள வேண்டுகோள்.

இஸ்லாமிய மதத்தினரின் நோன்பு இன்று ஆரம்பிக்க இருக்கும் நிலையில் பிரான்ஸ் மருத்துவச் சமுகம் விடுத்துள்ள வேண்டுகோள்.

10 பங்குனி 2024 ஞாயிறு 08:06 | பார்வைகள் : 4763


இஸ்லாமிய மதம் பழக்கங்களில் ஒன்றான நோன்பு எனும் மிக கடுமையான, சூரியன் உதையமாகி மறையும் வரையான பகல் முழுவதும் நீர் உட்பட உணவு தவிர்ப்பு உண்ணாநோன்பு (10/03) இன்று ஆரம்பிக்க இருக்கும் நிலையில், அவர்களின் உடல் சார்ந்த கவனத்தை கடைப்பிடிக்கும் படி பிரான்ஸ் மருத்துவ சமூகம் விசேட வேண்டுகோள் விடுத்துள்ளது.

குறித்த காலத்தில் பல இஸ்லாமிய சகோதரர்கள் மயக்கம் அடைந்த நிலையில் மருத்துவமனைகளுக்கு வருவதும், அதிக சர்க்கரை, உப்பு, கொழுப்பு நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு வருவதும் அதிகரித்து வருகிறது என மருத்துவ சமூகம் சுட்டிக்காட்டியுள்ளது.

நோன்பை ஆரம்பிப்பதற்கு முன்னர் எடுக்கும் உணவில் முடிந்தவரை சர்க்கரை, உப்பு போன்ற வற்றை தவிர்க்குமாறும் அதிக நீர் ஆகாரங்களை எடுத்துக் கொள்வதோடு புரதச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும் எனவும் பிரான்ஸ் மருத்துவ சமூகம் இஸ்லாமிய சகோதரர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

அதேபோல் நோன்பை முடித்து கொள்ளும் இரவு உணவிலும் அதிக நீர் ஆகாரங்களோடு அளவான சர்க்கரை, உப்பு, கொழுப்பு சத்துள்ள உணவு வகைகளை எடுத்து கொள்ளுபடி அறிவுரை வழங்கப் பட்டுள்ளது 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்