Paristamil Navigation Paristamil advert login

"La vache qui rit" இந்த சீஸ் அட்டைப் பெட்டியில் எப்படி சிரித்த காளையின் ஓவியம் வந்தது? வரலாறு பார்ப்போம்.

10 பங்குனி 2024 ஞாயிறு 08:07 | பார்வைகள் : 5926


இந்த ஓவியம் "La vache qui rit" சீஸ்
அட்டைப் பெட்டியில் இடம் பெற்றிருப்பது பிரான்சின் பாரம்பரிய பண்பாட்டின் வரலாறு. Jules Bel என்பவர் மலிவான சீஸ் வகையை தயாரிக்க 1865ல் ஒரு ஆலையை நிறுவினார். அந்த ஆலையை Léon எனும் அவரின் மகனிடம் 1919ல் தந்தை கையளித்தார்.

அந்த காலகட்டத்தில் Jules Bel அவர்களுக்கு முதலாம் உலகப் போரில் சண்டையிடும் இராணுவத்தினருக்கு இறைச்சி வகைகளை வழங்கும் வியாபாரம் கிடைக்கிறது. இதனால் அவர் அடிக்கடி இராணுவ முகாம்களுக்கு சென்று வரும் சந்தர்ப்பம் கிடைத்தது. அங்கு வீரர்கள் அகழிகளில் பல வித்தியாசமான ஓவியங்களை வரைந்து ரசித்து வருவதை பார்க்கக் கிடைத்தது.

அதில் ஒரு ஓவியம் RVF B70 படைகளின் தளபதியால் சிறந்த ஓவியர் Benjamin Rabier அவர்களிடம் இருந்து பெறப்பட்ட காளை மாடு ஒன்று சிரிப்பது போன்ற ஓவியமாக இருந்ததைப் பார்த்தார் Jules Bel 'சிரிக்கும் காளையின்  உத்தியானது, வேளாண் உணவுத் தொழிலில் மிகவும் சந்தோசத்திற்குரிய சந்தைப்படுத்தல் பாரம்பரியத்தின் ஒரு மகிழ்ச்சி" என உணர்ந்தார் Jules Bel.

எனவே தனது மகனிடம் கையளித்த சீஸ் கட்டிகளை தயாரிக்கும் அடீடைப் பெட்டிகளில் குறித்த ஓவியத்தை "logo" அடையாளமாக பதிய முடிவெடுத்து சிரிக்கும் காளையின் ஓவியத்தை பதிவு செய்தார் Jules Bel.

அன்றில் இருந்து இன்று வரை சுமார் 105 ஆண்டுகள் குறித்த ஓவியம் "La vache qui rit" சீஸ் அட்டை பெட்டிகளில் வலம் வந்து வரலாறானது.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்